Vijay Tv Tribute Video to Chithra

வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே என் அக்காவுக்காக உருக்கமான அஞ்சலி வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Vijay Tv Tribute Video to Chithra : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினி ஆகவும் வலம் வந்தவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

ஹேமந்த் ரவி என்பவரை ஜனவரி மாதத்தில் திருமணம் செய்துகொள்ள இருந்தார். இவர்களுக்கு இரு மாதங்களுக்கு முன்னர்தான் நிச்சயதார்த்தம் முடிந்தது.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தொடர் பிரச்சனை காரணமாக ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ராவின் தற்கொலை குறித்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் விஜய் டிவி புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சித்ராவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடைய திறமைகளை பாராட்டி அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோவின் இறுதியில் வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே என உருக்கமாக முடித்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ