Vijay Tv Serial Actor in Ponniyin Selvan

பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் டிவி சீரியல் நடிகர் நடிப்பதை முடிவு செய்துள்ளார்.

Vijay Tv Serial Actor in Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் தற்போது தன்னுடைய கனவு படமான பொண்ணியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்திய திரையுலகில் நடிகர்களாக வலம் வரும் பல மொழி நடிகர்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். தமிழ் நடிகர்களான கார்த்தி, விக்ரம், ஜெயராம், திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது இவர்களுடன் விஜய் டிவி சீரியல் நடிகர் அம்சாத் கான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அவர் உறுதி செய்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியலில் முதலில் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.