Vijay TV Pugazh About Shankar

இயக்குனர் ஷங்கர்அலுவலகத்தில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பை நம்பி நேரில் சென்று ஏமார்ந்துள்ளார் விஜய் டிவி புகழ்.

Vijay TV Pugazh About Shankar : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ்.

இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ஒரு முறை சங்கர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அழைப்பு ஒன்று வந்ததாகவும் சென்னை கிண்டியில் உள்ள ஒரு இடத்திற்கு வரச் சொன்னார்கள். நம்பிக்கையுடன் சென்று பார்த்தால் அங்கு எனக்கு ஃபோன் செய்தவரின் மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

இதனால் ஏமாற்றத்துடன் அந்த இடத்திலிருந்து வீடு திரும்பினேன். நிகழ்ச்சியில் தான் நான் கோமாளி நிஜத்தில் அல்ல என உருக்கமாக பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.