பிகில் இசைவெளியீட்டு விழாவில் இளம்பெண் சுபஸ்ரீ-யின் மரணம் குறித்து விஜய் பேசியது நீக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Talk about subashree is cut in sun tv – சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ‘சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீது, பேனர் அச்சடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள்.

யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் உள்ளனர்’ என அதிமுக அரசை மறைமுகமாக சாடினார்.

அதை விட ஒரு படி மேலே போய் ‘யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் சரியாக இருக்கும்’ எனப் பேசி அதிர வைத்தார்.

vijay2

அவரின் அந்த பேச்சுக்கு அதிமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘நடிகர் விஜய் யாரை கேட்டு பேசுகிறார் என்பது தெரியவில்லை.

அவரின் பேச்சை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தனது படங்களை ஓட வைக்க தெரியாமல் அப்படி பேசியிருப்பார்.

முதல்வரிடம் அவரை பேசவைக்க வில்லை எனில் சர்கார் படமே வெளியே வந்திருக்காது. மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளனர்’ என தெரிவித்தார்.

அதேபோல், அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயை கடுமையாக விமர்சித்தார். விஜய் அல்ல, கவுண்டமணி, செந்தில் கூட கட்சி தொடங்கலாம் எனவும் கிண்டலடித்தார்.

kadamburஇந்நிலையில், பிகில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதில், சுபஸ்ரீ பற்றி விஜய் பேசியதை சன் டிவி நீக்கி விட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் பலரே சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பாளர் பதிவிட்ட ட்வீட்.!

இந்த விஷம் விஜய்க்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கவே சுபஸ்ரீ பற்றிய கருத்துகள் நீக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.

அதோடு, பிகில் படம் வெளியாகும் போது அரசு தரப்பில் முட்டுக்கட்டை போட்டால் என்ன செய்வது என அஞ்சியே விஜயின் அந்த பேச்சுக்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.