Vijay Sri Request to PM
Vijay Sri Request to PM

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் டைட்டில் கார்டில் பதிவிட வேண்டுகோள்.

Vijay Sri Request to PM : மத்திய தணிக்கைக்குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் துவங்குவதற்கு முன் மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும். இந்நாள் வரை அந்த பதிவும் திரைப்படம் துவங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா87” படத்தின் டைட்டில் கார்டில், ”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்” என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவிட்டோம்.

தற்சமயம் நாட்டை கண்ணீரில் ஆழ்த்திய ஹாரித்துவார் சம்பவம் நம் தேசத்தின் மகள் கொடூராமாக தாக்கப்பட்டு தீயில் கருகிய செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

எங்கள் ”பொல்லாத உலகில் பயங்கர கேம்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஒரு சில கயவர்களால் பெண் ஒருவள் சிதைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட காட்சியையும், தொடர்ந்து அந்த கயவர்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கப்படுவதையும் படமாக்கியிருக்கிறோம்.

தாதா87 படத்தில் சாருஹாசன் பேசிய பெண்களை தொட்டால் கொளுத்துவேன் என்ற வசனம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டனர் என்பதை திரைப்பட வெற்றி பதிவு செய்தது. இன்று பல நாடுகளில் சட்டமானது.

பெண்களுக்கு ஏற்படும் வன்முறை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனையும், சட்டமும் மட்டுமே அரணாக இருக்கும்.

தவறு இழைத்தவர்கள் மீது மத்திய அரசும் மாநில அரசும் இந்திய நீதித்துறையும் நிச்சயம் தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய, மாநில அரசு மற்றும் எதிர் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்ற எல்லா கோரிக்கைகளிலும் குரல் கொடுக்கும் தலைவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வை மத்திய செய்தி தொடர்பு அமைச்சகம் தணிக்கை குழுவினர் ஒருங்கிணைந்து, 2012 செப்டம்பர் 26ல் திரைப்பட “டைட்டில் கார்டில் வெகுஜன மக்கள் மத்தியில் ஒன்றுடன் கலந்த சினிமா மூலமாக விழிப்புணர்வை பதிய வைத்தார்கள்.

அதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கையையும் பதிவிடுங்கள் என பொல்லாத உலகில் பயங்கர கேம் மற்றும் பவுடர் படத்தின் படக்குழுவினர் சார்பாக அனைவரும் ஒன்று கூடி வேண்டுகோள் வைக்கிறோம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.