Vijay sethupathi’s Next : மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் படு பிஸியான முன்னணி நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டும் தான். ஒவ்வொரு வருடமும் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
பேட்டையை முந்திய விஸ்வாசம் – கார்த்தி சுப்புராஜ் ஆவேச பதில்.!
இவரது நடிப்பில் விரைவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்க உள்ள இந்த படத்தில் முழு நேர காமெடியனாக நடிகர் சூரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அரசியல் ஆசையில் தவித்து வருகிறார் தளபதி – பிரபல பத்திரிகையாளர் பரபரப்பு பேச்சு.!
அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜூம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.