Vijay Sethupathi46 Movie Update

விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi46 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோதான் என்றில்லாமல் கிடைக்கும் வாய்ப்பு படங்களில் வில்லனாகவும் தலைகாட்டி வருகிறார். மாஸ்டர், பேட்ட உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக யாதும் ஊரே யாவரும், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்திற்கு இம்மான் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்ற அறிமுக நடிகை நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.