நடிகர் விஜய் சேதுபதி ‘சங்கதமிழ்ச்செல்வன்’ திரைப்படத்தின் இயக்குனர் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Vijay sethupathi trademark kiss to director – வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து அதில் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி.

ஆனால், றெக்க திரைப்படத்தில் திடீரென அதிரடி சண்டை காட்சிகள் நடித்தார். அதன்பின் சில வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படமும் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாகும். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

நடிகர் விஜய் சேதுபதி குஷியான மூடில் இருந்தால் தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் அல்லது தனக்கு பிடித்தமான இயக்குனர்களின் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படி அவர் பலருக்கும் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது.

நேர்கொண்ட பார்வை நான்கே நாள் தான் ஓடியது – பிரபல இயக்குனர் சர்ச்சை பேச்சு.!

இந்நிலையில், சங்கத்தமிழன் படத்திற்கான டப்பிங் வேலையை விஜய் சேதுபதி முடித்துக் கொடுத்துவிட்டார்.

அதன்பின் அப்பட இயக்குனர் விஜயசந்தரின் கன்னத்தில் முத்தம் கொடுத்து அன்பை தெரிவித்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

https://platform.twitter.com/widgets.js