இதை ஏன் என்னிடம் கேட்கறீங்க என விஜய் பற்றிய கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளித்துள்ளார்.

Vijay Sethupathi Reply to Vijay Questions : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார்.

இவர் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. தளபதி விஜயின் இந்த செயல் குறித்து தற்போது வரை பேசி வருகின்றனர்.

இப்படியான நிலையில் தளபதி விஜய் சைக்கிளில் வந்தது குறித்து ஓட்டு போட வந்த விஜய் சேதுபதியிடம் பத்திரிகையாளர்கள் கேட்க அதற்கு அவர் அதிரடி பதிலளித்துள்ளார்.

அதாவது அதை ஏன் என்னிடம் கேட்கறீங்க, அவரிடமே போய் கேளுங்கள் என கூறியுள்ளார். மேலும் ஓட்டு போடும் இடம் சுத்தமாக இருந்தா என்ற கேள்விக்கு சூப்பர் எனவும் பதிலளித்துள்ளார்.