Vijay Sethupathi Movie Title

Vijay Sethupathi Title : விஜய் சேதுபதி நடிப்பில் கூடிய விரைவில் சிந்துபாத் படம் திரைக்கு வரவுள்ளது. இதுபோக பல படங்களில் அவர் ஒப்பந்தமாகி வருகிறார். இதில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படமும் ஒன்று.

இப்படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இப்படத்திற்கு லாபம் என பெயர் வைத்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு இன்று விஜய் சேதுபதியின் சொந்த ஊரான இராஜபாளையத்தில் துவங்கியுள்ளது. இதை புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மிஸ்டர் லோக்கல் தள்ளிபோக இந்த படம்தான் காரணமா? வெளிவந்த புதிய தகவல்!

இப்படத்தில் விஸ்வாசம் படத்தின் வில்லன் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறாராம். மேலும் எஸ்.பி.ஜனநாதன் படங்களுக்கே உரிய சமுக அக்கறை கொண்ட கதையமைப்புடன் இப்படம் தயாராகி வருகிறதாம்.

அதேபோல் இப்படத்தில் விஜய் சேதுபதி புரட்சியாளராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழில் கடைசியாக சூர்யா ஜோடியாக சிங்கம் 3 படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் மூலமாக கம்பேக் கொடுக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.