Vijay Sethupathi in Vetrimaran Movie

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi in Vetrimaran Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான வடசென்னை அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது துணைவன் என்ற நாவலைத் தழுவி உருவாகி வரும் படத்தில் சூரியை ஹீரோவாக வைத்து இயக்கி வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். அதன்பன்னர் தளபதி விஜயை வைத்து படத்தை இயக்க தயாராகி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது புதிய படத்திற்காக விஜய் சேதுபதியும் வெற்றிமாறனுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இவர் வட சென்னை படத்தில் நடிக்க இருந்த நிலையில் அது முடியாமல் போனதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.