Vijay Sethupathi in Vetrimaran Movie

வெற்றிமாறன் இயக்கும் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi in Vetrimaran Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெற்றிமாறன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் காமெடி நடிகரான சூரியை ஹீரோவாக வைத்து எடுக்க உள்ள படத்திற்கு பாரதிராஜாவை வில்லனாக தேர்வு செய்தனர்.

ஆனால் காடுகளில் முழு படப்பிடிப்பு நடக்க இருப்பதால் குளிர் தாங்க முடியாத சூழல் ஏற்பட்டு படத்திலிருந்து விலகியுள்ளார் பாரதிராஜா.

இவருக்கு பதில் விஜய் சேதுபதியை வில்லனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.