Vijay Sethupathi in Sp Jaganathan Funeral

எஸ்பி ஜனநாதன் இறுதி ஊர்வலத்தில் விஜய் சேதுபதி கண்கலங்கியபடி மலர் தூவி சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi in Sp Jaganathan Funeral : தமிழ் சினிமாவில் பேராண்மை, நான் ஈ, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ் பி ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து லாபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இப்படியான நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பி ஜனநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. திரையுலகப் பிரபலங்கள் நடிகர்கள் நடிகைகள் என பலரும் இயக்குநர் ஜனநாதனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தியது மட்டுமல்லாமல் இறுதி ஊர்வலத்தில் கண் கலங்கியபடி மலர் தூவி சென்றுள்ளார். இந்த புகைப்படம் பார்ப்போரை கண்கலங்க வைத்து வருகிறது.