Vijay Sethupathi Helps to Thavasi

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு உதவி செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Helps to Thavasi : தமிழ் சினிமாவின் கிழக்குச் சீமையிலே திரைப்படம் முதல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வரை பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் தவசி.

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற டயலாக் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது உணவுக் குழாயில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புற்று நோய் பாதிப்புக்குள்ளான இவர் உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் எலும்பும் தோலுமாக மாறிப் போய் விட்டார்.

இவருடைய லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் சௌந்தரராஜா ரூபாய் பத்தாயிரம் கொடுத்து உதவியுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதி மற்றும் சௌந்தரராஜாவின் உதவிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.