Vijay Sethupathi Again as Anchor

விஜய் சேதுபதி மீண்டும் தொகுப்பாளர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi Again as Anchor : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

நடிகராக மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் சேதுபதி மீண்டும் தொகுப்பாளர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். சமையலை மையமாக கொண்டு உருவாக உள்ள நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க உள்ளார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரித்த என்டோமால் நிறுவனம் இந்த நிகழ்ச்சியையும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.