Kamal and Vijay Sethupathi

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக வெளியான தகவலை அவர் விளக்கமளித்துள்ளார்.

Vijay Sethupathi About Vikram Movie : தமிழ் சினிமாவின் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர் என தொடர் வெற்றிப் படங்களாக இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ்.

இப்படங்களை தொடர்ந்து இவர் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் இனடர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை வரும் பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தி இருந்தார். விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்து விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

விக்ரம் படத்தில் வில்லனாக நடிப்பதற்காக என்னை அணுகினார்கள். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. நடிப்பது உறுதியானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி என்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.