Vijay Sethupathi About Vijay and Rajini Success

விஜய் மற்றும் ரஜினியின் வெற்றிக்கு காரணம் என்ன என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi About Vijay and Rajini Success : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. துணை நடிகராக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும் மிரட்டி வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் ரஜினியின் வெற்றிக்கு காரணம் என்ன என பேசியுள்ளார்.

அதாவது தளபதி விஜய் மற்றும் ரஜினி இருவருமே பெரிய நடிகர்கள் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் நடந்து கொள்வார்கள். இதுவரை நான் அவர்களிடம் அப்படி எதையும் பார்த்ததில்லை.

இருவருமே செட்டிற்கு வந்து விட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்கள். வேறு எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார்கள். இவர்களின் வெற்றிக்கு இது தான் காரணம் என நான் நினைக்கிறேன்.

நானும் ஹீரோவாக நடித்து வருவதால் படங்களில் எனக்கு முழு இடம் கொடுத்தார்கள். இதனால் அவர்களுடன் மீண்டும் மீண்டும் பணியாற்ற ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.