தளபதி விஜய்யின் சம்பளம் நூறு கோடியைத் தாண்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vijay Salary for Thalapathy66 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் தில் ராஜு தயாரிப்பு தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் இந்தத் திரைப்படத்திற்காக 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் ரூபாய் 120 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்திற்காக ரூபாய் 80 கோடி சம்பளம் வாங்கினார் விஜய். தற்போது உருவாகி வரும் படத்திற்கு அவர் 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.