Vijay Request to Fans
Vijay Request to Fans

பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து தளபதி விஜய் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Vijay Request to Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.

தற்போது இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் மார்ச் 9ஆம் தேதி ரிலீஸக இருந்த நிலையில் பரவி வரும் கொரானா வைரஸால் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போனது.

விஜய்யின் அடுத்த 65,66,67 படங்களின் தயாரிப்பாளர்கள் யார்…யார் தெரியுமா?

இதனையடுத்து இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அன்று மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் விஜய்யின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தளபதி விஜய் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது தன்னுடைய பிறந்தநளுக்கு தேவையில்லாத செலவுகளை தவிர்த்து வறுமையில் வாடிய மக்களுக்கு நல்லுதவி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் விஜய்யின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் மாஸ்டர் படத்திலிருந்து டீஸர் அல்லது ட்ரெய்லர் ஏதாவது ஒன்று நிச்சயம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே விஜய் இந்த கொரானா வைரஸ் சமயத்தில் வறுமையில் வாடும் ரசிகர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எதிர்பார்க்கிறது நடக்கவே நடக்காது.. விஜய்யின் பிறந்த நாளுக்கும் மாஸ்டர் ரிலீஸ் இல்லை – வெளியான அதிர்ச்சி தகவல்.!

மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தைப் பற்றியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. எனவே இதையும் விஜய்யின் பிறந்த நாளில் எதிர்பார்க்கலாம்.