மீண்டும் SAC-க்கு பதிலடி

அவசர அவசரமாக பனையூர் பண்ணை வீட்டில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தளபதி விஜய் புதிய முடிவு ஒன்றை எடுத்து SAC-க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தன்னுடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மூலமாகத்தான் திரையுலகில் அறிமுகமாகி வளரத் தொடங்கினார்.

அதன் பின்னர் தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் பல்வேறு தடைகளை தாண்டி இன்று உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார். விஜய் விரைவில் அரசியல் களம் காண்பதற்காக ஆயத்தமாகி வருகிறார். அதன் வெளிப்பாடாகவே தொடர்ந்து அவருடைய படங்களில் அரசியல் பேசி வருகிறார்.

தளபதி விஜய்க்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இருந்தாலும் அது இப்போதைக்கு வேண்டாம் என இருந்து வருகிறார். ஆனால் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் எப்படியாவது விஜய்யை முதல்வராகி பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசையில் விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

விஜய்யின் அனுமதியில்லாமல் அவர் இதைச் செய்ததையடுத்து தளபதி விஜய் அறிக்கை ஒன்றின் மூலமாக எனக்கும் அந்தக் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அந்த கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைந்து செயலாற்ற வேண்டாம். என்னுடைய பெயர், புகைப்படங்கள், கொடி ரசிகர்களை பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.

இந்த விவகாரம் நாளுக்கு நாள் பேசுபொருள் ஆகி கொண்டே இருந்த நிலையில் விஜய் 30 மாவட்ட நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது 30 மாவட்ட நிர்வாகிகளையும் மாற்றி அமைத்து உத்தரவிட்டார். இதில் ஏற்றிய SAC-க்கு நெருக்கமானவர்கள் யாருக்கும் மாவட்ட நிர்வாகி பதவி கொடுக்கப்படவில்லை.

அதேபோல் கேரளா கர்நாடகா மாநில நிர்வாகிகளையும் அவர் மாற்றியுள்ளார்.

எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தன்னுடைய மகன் விஜய்யை சுற்றி ஒரு விஷ வலை பின்னப்பட்டுள்ளது. அவருக்குத் தெரியாமல் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதிலிருந்து அவரை மீட்டு வெளியே கொண்டு வரவே கட்சி ஆரம்பித்ததாக கூறினார்.

மேலும் விஜய் என் மீது நடவடிக்கை எடுத்து ஜெயிலுக்கு அனுப்பினாலும் அனுப்பட்டும். மகனால் அப்பா ஜெயிலுக்கு போனால் அதுவும் வரலாறு தானே என அவர் அளித்த பேட்டியில் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.