Sarkar

தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் அவருடைய பெயர் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் சர்கார்.

இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் படத்தில் விஜய்யின் பெயர் சுந்தர் என குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர் என்பதும் நாம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தான்.

மேலும் இப்படத்தின் கதை எப்படி கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது என்பதையும் இந்த பிரச்சனையின் விளைவுகளையும் பேசும் படமாகவும் இருக்குமென கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் இன்று மாலை டீசர் வந்தவுடன் படத்தின் கதையை ஓரளவிற்கு கணித்து விடலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.