Vijay Movie Updates
Vijay Movie Updates

Vijay Movie Updates : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100-வது படத்தில் விஜய் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. இவர் விஜய்யின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவரை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

அந்த உரிமையில் அண்மையில் இதுதொடர்பாக விஜய்யை சந்தித்து பேச விஜய்யின் வீட்டிற்கு நேராக சென்றுவிட்டாராம் ஆர்.பி.சௌத்ரி.

ஆனால் ஆர்.பி.சௌத்ரியை சுமார் இரண்டு மணிநேரம் காக்கவைத்த விஜய், இரண்டே நிமிடத்தில் பேசிவிட்டு அனுப்பிவிட்டாராம்.

இதனால் விஜய்க்கு இந்த படத்தில் திருப்தியில்லை என்பது உறுதியாகிவிட்டது. இது தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.