Vijay & Karunakaran : தன்னை விமர்சித்த நடிகர் கருணாகரனை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்துள்ளார். முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருந்தது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் குட்டி கதை ஒன்றையும் கூறியிருந்தார்.
விஜய் சொன்ன இந்த குட்டியை இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? இல்லை உங்க ரசிகர்களுக்கும் தானா என கருணாகரன் ட்விட்டரில் பொங்கி இருந்தார்.
கருணாகரனின் இந்த டீவீட்டால் கோபமடைந்த தளபதி ரசிகர்கள் கருணாகரனை மோசமாக திட்டி தீர்த்து வந்தனர். கருணாகரன் போலீஸ் புகார் வரை சென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் கருணாகரனை சந்தித்து பேசியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சர்கார் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த இடத்தில் கருணாகரன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புகளும் நடந்து வந்துள்ளன.
அப்போது கருணாகரன் விஜயை பார்க்க தயக்கமடைந்து அவரை பார்க்காமலே சென்றுள்ளார். அதன் பின்னர் விஜய் கருணாகரனை சந்தித்து என்னுடைய ரசிகர்கள் உங்களை திட்டி தீர்த்ததாக கேள்விப்பட்டேன்.
அவர்கள் என் மீது வைத்துள்ள பாசத்தால் அப்படி செய்து விட்டார்கள் மன்னித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
மேலும் நாமும் ஒரு விஷயம் சொல்லும் போது பலமுறை யோசித்து சரியானதாக கூற வேண்டும்.
நானும் அப்படி தான் செய்வேன். நீங்களும் அதையே பின்பற்றுங்கள் என அறிவுரை கூற கருணாகரன் மன்னித்து விடுங்கள் அண்ணா என விஜயிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இணையத்தில் காட்டு தீ போல பரவி வரும் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது சரியாக தெரியவில்லை.