Vijay Meeting With CM Edappadi Palanisamy

தளபதி விஜய் இன்று முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Meeting With CM Edappadi Palanisamy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் வந்தது. இந்த படத்தின் ரிலீஸ் ஜனவரி 13-ஆம் தேதி இருக்கும் என தற்போது கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்ததாக இணையதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு தளபதி விஜய் கோரிக்கை வைத்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.