Vijay and Vetrimaran Movie

வெற்றிமாறன் படத்தில் தளபதி விஜய் நடித்தால் எப்படி இருக்கும் என போஸ்டர் ஒன்று இணையத்தில் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Vijay in Vetrimaran Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில் தளபதி விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்தால் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்குமென புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.