Vijay in Mudhalvan 2
Vijay in Mudhalvan 2

நண்பன் படத்துக்குப் பிறகு ஷங்கர், விஜய் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Vijay in Mudhalvan 2 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து லலித் குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், சேத்தன், ஸ்ரீநாத், ரம்யா சுப்ரமணியன், மகேந்திரன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். ஆடை பட இயக்குனர் ரத்னகுமார் லோகேஷூடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

மாஸ்டரை நம்பி ஏமாந்த மாளவிகா மோகனன்.. போட்ட கணக்கெல்லாம் தப்பா போச்சு!

இந்த படத்தை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

அதன்பிறகு பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நண்பன் படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைய உள்ளனர்.

மேலும் இப்படம் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.