Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துக்களை கூறி விஜய் ரசிகர்கள் கோரிக்கை ஒன்றையும் அமைத்துள்ளனர்.

Vijay Fans Request to Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி என்ற திரைப்படத்தை இயக்கினார். கார்த்தி நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 300 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை ஆடியது.

இன்று லோகேஷ் கனகராஜ் தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களும் லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்துக்களை கூறி வருவது மட்டுமல்லாமல் மாஸ்டர் திரைப்படத்தினை போல இன்னும் ஒரு மாஸான படத்தினை கொடுக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.