Vijay Fans Reaction To Annathae Release Date

அண்ணாத்த ரிலீஸ் தேதியால் விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்து வருகின்றனர்.

Vijay Fans Reaction To Annathae Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து நடித்த திலீப் குமார இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்துவரும் இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் என்றால் தளபதி 65 ரிலீஸ் இல்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வருடத்தில் இரண்டு விஜய் படம் ரிலீசாகும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். தயவுசெய்து விஜய் படத்தை ரிலீஸ் பண்ணுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இல்லையென்றால் படம் பற்றிய அப்டேட் ஏதாவது வெளியிடுங்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.