Vijay Fans Plan on Tamilnadu Election 2026

2021 சட்டமன்ற தேர்தல் முடிவடையாத நிலையில் 2026 தேர்தல் குறித்து தற்போதே கணக்கு போட்டு வைத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Vijay Fans Plan on Tamilnadu Election 2026 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து பல இயக்குனர்கள் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரீதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையாடியது. 50 சதவித இருக்கைக்கு மட்டுமே அனுமதி அறிவித்திருந்த போதிலும் ரூபாய் 300 கோடிக்கு மேல் படம் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இத் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உளள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது நாள் வரை விஜய் அரசியலில் ஆர்வம் காட்டாமல் அமைதியாக இருந்து வருகிறார். இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் 2026 தேர்தல் குறித்து தற்போதே முன்கணக்குப் போட்டு வைத்துள்ளனர். அதாவது 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலில் இறங்கி போட்டியிட வேண்டும். அப்போது ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ராமதாஸ் ஆகியோர் வயதானவர்களாக இருப்பார்கள்.

ஆகையால் விஜய் அரசியலில் களமிறங்கினால் தமிழக அரசியலில் புதிய ரத்தம் பாய்ச்சியது போல இருக்கும். தற்போது நாங்கள் எங்களுடைய ரசிகர் மன்றங்களை பலப்படுத்தி வைத்துள்ளோம். ஒவ்வொரு வார்டிலும் கிட்டத்தட்ட 60 க்கும் அதிகமான விஜய் ரசிகர்கள் உள்ளார்கள். தளபதி கண்ணசைத்தால் போதும் அடுத்த கணமே எங்களது ரசிகர் மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி விடுவோம் என தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தலில் வெற்றி பெறுவது எல்லாம் எங்களுக்கு பெரிய விஷயம் அல்ல. இதற்கு முன்னதாக நடைபெற்ற பல தேர்தல்களில் விஜய் ரசிகர்கள் தேர்தலில் நின்று விஜய் புகைப்படம் எதுவும் பயன்படுத்தாமலேயே ஜெயித்து காட்டியுள்ளனர் எனவும் கூறி வருகின்றனர்.