Vijay Fans Blast Blue Sattai Maaran

மாஸ்டர் படத்தைப் படுமோசமாக கிழித்து தொங்க விட்டுள்ளார் யூடியூப் பிரபலம். இதனால் ரசிகர்கள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Vijay Fans Blast Blue Sattai Maaran : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக மாஸ்டர் அமைந்துள்ளது. ரசிகர்கள் பலரும் படத்தை கொண்டாடி வரும் நிலையில் யூடியூப் பிரபலமான ப்ளூ சட்டை மாறன் கால் தனியா கை தனியா போய் முண்டம் மட்டும் தான் வந்திருக்கு மிக மோசமாக மாஸ்டர் படத்தை விமர்சனம் செய்துள்ளார்.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்க விட்டு வருகின்றனர். உங்களுக்கு மாஸ்டர் படம் பிடித்த மாதிரி இருக்கு அது போதும் எனக் கூறி வருகின்றனர்.