விஜய்

நாங்கள் விஜய் மற்றும் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் உறுதி அளித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய தந்தை SAC அவர்களால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் உச்ச நட்சத்திரமாக இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய்க்கு தெரியாமல் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் அந்த கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அறிக்கை வெளியிட்டது மேலும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனால் விஜய் மற்றும் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இடையே பிரச்சனை என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதை வைத்து இருவரையும் பிரிக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாக விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் நாங்கள் இருவருக்கும் உறுதுணையாக இருப்போம். இருவருக்கும் இடையில் எந்தவித பிரச்சனயும் இல்லை என #SACwithThalapathy மற்றும் We stand with fatherandson என்ற டேக்குகளை உருவாக்கி உள்ளனர்.

இந்த டேக்குகள் ட்விட்டர் டிரெண்ட்டிங்கிலும் இடம் பிடிக்க தொடங்கியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.