Vijay Devarakonda in Liger Movie

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் பன்மொழி இந்திய திரைப்படத்திற்கு
LIGER ( saala Crossbreed ) என தலைப்பிடப்பட்டுள்ளது.

Vijay Devarakonda in Liger Movie : தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா பாலிவுட் உலகில் எதிர்பார்ப்புமிக்க இந்தியளவிலான பன்மொழி திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஐ ஸ்மார்ட் ஷங்கர் எனும் பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை தந்த கமர்ஷியல் வெற்றி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

Puri connects நிறுவனத்துடன் இணைந்து இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து தயாரிக்கிறது.

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார்.

இன்று படக்குழுவினர் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு “LIGER” Saala Crossbreed எனும் அடி தலைப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா நீண்ட தலை முடியுடன், மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரருடைய தோற்றத்தில் கையில் கிளவ்ஸுடன் நிற்கிறார். பின்னணியில் சிங்கமும், புலியும் கலந்து நிற்கிறது.

லைகர் Liger என்பது உயர்தர சரணாலய விலங்காகும். இவ்விலங்கு ஆண் புலி, பெண் சிங்கத்துடன் கலப்பதால் உருவாகும் கலப்பின விலங்கே Liger.

இப்படத்தின் டைட்டில் வித்தியாசமானதாகவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

தனது நாயகர்களை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டும் திறமை கொண்ட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை மிகவும் வித்தியாசமான, இதுவரை கண்டிராத தோற்றத்தில் காட்டியுள்ளார். விஜய் தேவரகொண்டா நீண்ட தலைமுடியுடன் மிகவும் ஸ்டைலிஷான லுக்கில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அழகாக தோற்றமளிக்கிறார்.

இந்தியளவில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாக்குகின்றனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார்.

பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.

ரம்யா கிருஷ்ணன் மிக முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.