Vijay Decision on Election 2020

2021 சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து விவாதித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

Vijay Decision on Election 2021 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கு என உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவர் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தளபதி விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை உள்ள பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அது சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் உண்மையில் பண்ணை வீட்டில் அரசியல் கட்சி ஆதரவு குறித்து எந்தவித விவாதமும் நடைபெறவில்லை. தன்னை தொடர்பு படுத்தி அரசியல் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் தேர்தல் நேரத்தில் விஜய் நிச்சயம் ஒரு நிலைப்பாட்டை எடுப்பார். அது அதிமுக பிஜேபி கூட்டணிக்கு எதிரானதாகவே இருக்கும். அதனால் விஜய் திமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு திமுகவுக்கா?? கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.