Vijay Condition on Thalapathy 66

தளபதி 66 திரைப்படத்தை எங்க லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு கண்டிஷனை விதித்துள்ளார் நடிகர் விஜய்.

Vijay Condition on Thalapathy 66 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

பின்னர் தளபதி 66 திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. விஜய் லோகேஷ்க்கு ஒரு கண்டிஷன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தளபதி 66 படம் உனக்குத்தான் ஆனால் வில்லனாக வில்லன் நடிகர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். முன்னணி நடிகர்களை தேர்வு செய்ய வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜயின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அதைவிட விஜய் சேதுபதியின் நடிப்பு ஒரு படி அதிகமாக பாராட்டப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.