Vijay Character in Thalapathy 65

தளபதி 65 படத்தில் விஜய் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Character in Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், தளபதி விஜய் நடிப்பிலும், உருவாகி வெளியாக உள்ள திரைப்படம் தளபதி 65.

இந்தத் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. தற்போது இந்தப் படத்தில் விஜய் உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்த தகவல் தளபதி ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.