Vijay Character Details in Thalapathy65

தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vijay Character Details in Thalapathy 65 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தினை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும் தற்போது கூடுதலாக தளபதி விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது விஜய் இந்த படத்தில் இன்டர்போல் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு இது போன்ற தகவல்கள் கசிந்து வருவது என்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.