Vijay Antony Reduced His Salary
Vijay Antony Reduced His Salary

கொரானா வைரஸ் காரணமாக முதல் ஆளாக தன்னுடைய சம்பளத்தை விஜய் ஆண்டனி குறைத்து கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Vijay Antony Reduced His Salary : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதனால் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என நாளுக்கு நாள் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

விஜய் வீட்டில் கொரானா வைரஸ் சோதனையா? அதிர்ச்சியான ரசிகர்கள் – ஆனால் நடந்தது இது தான்.!

இந்த நிலையில் தற்போது முதல் ஆளாக விஜய் ஆண்டனி தான் நடித்து வரும் அடுத்த மூன்று படங்களுக்கான சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்ளுமாறு பட தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார்.

இதனால் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் பட்ஜெட்டை குறைத்து படத்தை எளிதாக ரிலீஸ் செய்ய முடியும் என விஜய் ஆண்டனி நம்புகிறார்.

விஜய் ஆண்டனியின் இந்த முடிவிற்கு அவர் நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தின் தயாரிப்பாளர் டி சிவா பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனி போலவே மற்ற தயாரிப்பாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொண்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Vijay Antony Reduced His Salary
Vijay Antony Reduced His Salary