Vijay Antony Join With CS Amuthan

தமிழ் பட இயக்குனர் சிஎஸ் அமுதன் உடன் கைகோர்த்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

Vijay Antony Join With CS Amuthan : தமிழ் சினிமாவில் தமிழ்ப்படம் 1 மற்றும் 2 என இரண்டு படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சி எஸ் அமுதன். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களை கலாய்த்து இந்த திரைப்படங்கள் வெளியாகின‌‌. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சி எஸ் அமுதன் அவர்கள் அடுத்ததாக விஜய் ஆண்டனி வைத்து பரபரக்கும் த்ரில்லர் கதை ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தினை infinite பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சி எஸ் அமுதன் இந்த படத்தின் கதையை என்னிடம் கூறும்போது நான் வாயடைத்து போனேன். அந்த அளவிற்கு திரில்லர் கதையை மையமாக கொண்ட படமாக இது உருவாகி உள்ளது.

அதேபோல் சி எஸ் இதில் விஜய் ஆண்டனியுடன் முதல் முறையாக இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.