Vijay and Cheran Movie Secrets

சேரன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருந்த திரைப்படத்தை விஜய் வேண்டாமென ட்ராப் செய்துவிட்டார். அதற்கான காரணத்தை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Vijay and Cheran Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேரன். தற்போது இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் இவர் இயக்கிய ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் இன்றளவும் பேசப்படும் படங்களாக இருந்து வருகின்றன.

ஆட்டோகிராப் திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தவர் தளபதி விஜய் தான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை இவர்கள் இணைய வாய்ப்பு அமைந்துள்ளது.

துபாயில் அந்த திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி இருந்த நிலையில் விஜய் தொடர்ந்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் அவரால் மாதத்திற்கு 10 நாள் மட்டும்தான் கால்சீட் கொடுக்க முடிந்துள்ளது. ஆனால் இயக்குனர் சேரன் தொடர்ச்சியாக 45 நாட்கள் வேண்டும் என அடம் பிடித்துள்ளார். இதனால் விஜய் இப்படத்தை வேண்டாமென டிராப் செய்துள்ளார்.

இதுபற்றி சேரன் சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் புலம்பி இருந்தார். இதுகுறித்து தயாரிப்பாளர் தேனப்பன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது இந்த படம் மட்டும் வெளியாகியது இரந்தால் அன்றே உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் என கூறியுள்ளார்.