Vijay and Atlee Upcoming Movie Update

விஜயுடன் பிரபல தெலுங்கு நடிகர் இணைந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay and Atlee Upcoming Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது திரைப்பயணத்தில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவரது இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகல் என மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதனால் இந்த கூட்டணி நான்காவது முறையாக அமைய வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அட்லி தேவையில்லாமல் சலுகை பிடத்து விடுவதாக கூறி அவரை வைத்து படம் தயாரிக்க தமிழ் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று அட்லி இயக்கும் விஜய் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ஜூனியர் என் டி ஆர் ஐ நடிக்க வைக்கவும் உள்ளது.

இந்த ஐடியாவையும் இயக்குனர் அட்லி தான் கொடுத்துள்ளார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கு மார்க்கெட் உருவாகும் என்பதால் இப்படி ஒரு பிளானில் உள்ளாராம் அட்லி. இந்த தகவல்கள் இணையத்தில் கசிந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

விரைவில் இந்த கூட்டணி அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.