Vijay About His Tress Buster

நான் கஷ்டப்படும் போதெல்லாம் என்னை தேற்றுவது இதுதான் என தளபதி விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

Vijay About His Tress Buster : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தநலையில் தளபதி விஜய் பல வருடங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நீங்கள் கஷ்டப்படும்போது என்ன செய்கிறீர்கள் என கேட்டதற்கு நான் கவுண்டமணி செந்தில் அவர்களின் தீவிர ரசிகன்.

எனக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டால் அவர்களது காமெடியை தான் பார்ப்பேன் என தெரிவித்துள்ளார். என்னுடைய காரில் கூட எப்போதும் இவர்கள் காமெடி தொகுப்பு அடங்கிய சிடி இருக்கும் என தெரிவித்துள்ளார்