Vignesh shivan propose to nayanthara

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலர் தினம் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vignesh shivan propose to nayanthara : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி, சத்யம், வில்லு, ஆதவன், ராஜா ராணி, வேலைக்காரன், நானும் ரவுடி தான், தனி ஒருவன், நண்பேன்டா, கோலமாவு கோகிலா, இமைக்காத நொடிகள், விசுவாசம், மிஸ்டர் லோக்கல் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நயன்தாரா.

இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் “நான் உன்னை காதலிக்கிறேன் தங்கமே” என்று க்யூட்டாக காதலர் தின வாழ்த்து தெரிவித்து கொண்டாடியுள்ளார்.

இந்த ட்விட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.