Vignesh About Nayanthara Pair With Vijay Sethupathi

விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நயன்தாரா நடிக்க உள்ளது பற்றி பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Vignesh About Nayanthara Pair With Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ், சூர்யா, சிம்பு என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். தற்போது அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் என் தங்கம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு பொறாமை இல்லை எனக் கூறியுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் மற்ற நடிகர்களோடு நடித்த போது பொறாமை இருந்துச்சா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.