Vidhya Balan Complaint on UP Minister

அஜித் பட நடிகையை அமைச்சர்கள் பேர் ரகசிய இரவு பார்ட்டிக்கு அழைக்க அந்த நடிகை அப்பட்டமாக போட்டு உடைத்துள்ளார்.

Vidhya Balan Complaint on UP Minister : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். பல படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் தமிழில் அஜித் ஜோடியாக நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமா பக்கமே வராத வித்யாபாலன் தயாரிப்பாளர் போனி கபூரின் கோரிக்கையை ஏற்று அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது ஷெர்னி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த காட்டில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனை அறிந்த மத்திய பிரதேச வனத்துறை அமைச்சர் வித்யாபாலனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இரவு பார்ட்டிக்கு அழைத்துள்ளார்.

அமைச்சரின் சூட்சமத்தை அறிந்து கொண்ட வித்யா பாலன் அவரது அழைப்பை நிராகரித்து உள்ளார். மேலும் இந்த தகவலை உடனடியாக படக்குழுவிடம் கூறி அந்த இடத்திலிருந்து காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தம்மை இரவு பார்ட்டிக்கு அழைத்ததை அப்பட்டமாக அனைவர் மத்தியிலும் போட்டு உடைத்துள்ளார் வித்யாபாலன். இதனால் மத்திய பிரதேச வனத்துறை அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.