Vidhya Balan About Her Cinema Life

குண்டாக இருக்க நீ ஹீரோயினா நடிக்க லாயக்கில்லை என கிட்டத்தட்ட 6 படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அஜித் நாயகி ஒருவர்.

Vidhya Balan About Her Cinema Life : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

இந்த படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தவர் வித்யாபாலன். பாலிவுட் நடிகையான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஹிந்தியில் குடும்ப பாங்கான படங்கள் பலவற்றில் நாயகியாக நடித்தவர் வித்யா பாலன் தான். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் துணிச்சலான கதாபாத்திரங்களிலும் துணிந்து நடித்து வருபவர்.

ஆனால் இவர் நடிக்க வந்த புதிதில் உடல் எடையை காரணம் காட்டி கேலி கிண்டல் செய்து கிட்டத்தட்ட 6 படங்களில் இருந்து தன்னை நீக்கியதாக வேதனையுடன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

எந்த ஒரு நடிகர் நடிகை நடிக்க வந்தாலும் அவர்கள் ஆரம்பத்தில் படும் இன்னல்கள் அதிகம். கேலி கிண்டல்களுக்கு உள்ளாவார்கள். அப்படித்தான் நான் ஆளானேன்.

மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். ஏழு நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நீ குண்டாக இருக்க, நாயகியாக நடிக்க செட்டாக மாட்ட என அந்த படத்தில் இருந்து என்னை தூக்கி வீசினார்கள்.

இதே காரணத்தை கூறி 6 படங்களில் இருந்து என்னை விலக்கினார்கள். இதனால் மன வேதனைக்கு உள்ளான நான் வெறும் பச்சை தண்ணீரை மட்டுமே உணவாக சாப்பிட்டு என் உடல் எடையை குறைத்தேன் என தெரிவித்துள்ளார்.

வித்யாபாலன் இவ்வாறு கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.