Veyyon Silli Vs Kutty Story Record

தளபதி ஸ்டோரி பாடலை பின்னுக்குத் தள்ளி வெய்யோன் சில்லி பாடல் சாதனை படைத்துள்ளது.

Veyyon Silli Vs Kutty Story Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சூர்யா. தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மாஸ்டர் படத்திலிருந்து வெளியாகியிருந்த குட்டி ஸ்டோரி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜியோ சவான் மியூசிக்கில் குட்டி ஸ்டோரி பாடல் அதிகமான பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் இருந்தது.

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றிருந்த வெய்யோன் சில்லி பாடல் 6.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று குட்டி ஸ்டோரி பாடலைப் பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இதற்கென தனி டேக் ஒன்றை உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர்.