தல அஜித் ரசிகர்கள் கொடுத்த தைரியத்தை நம்பி மீண்டும் விஜயுடன் மோத திட்டமிட்டுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.
Vettai Nai Clash With Master : தமிழ் சினிமாவில் தல தளபதி என்றாலே பெரும் மதிப்பு உண்டு, இவர்களின் படங்களுக்கு அதிக அளவில் வரவேற்பும் உண்டு. அதுவும் ஒரே நாளில் படம் ரிலீஸ் என்றால் கொண்டாட்டங்கள் வேற லெவலில் இருக்கும்.
ஆனால் சமீப காலமாக அஜித், விஜய் படங்கள் ஒரே தினத்தில் மோதி கொள்வது இல்லை, கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் படத்துடன் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஆர். கே சுரேஷ் அஜித் ரசிகராக நடித்திருந்த பில்லா பாண்டி திரைப்படம் மோதியது.
அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் ஓரளவிற்கு நல்ல வெற்றியையும் பெற்றது. இந்நிலையில் மீண்டும் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்துடன் ஆர். கே சுரேஷின் வேட்டை நாய் என்ற படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.