Vetrimaran About Vijay Movie

விஜய்யுடன் இணைவது உறுதி எனவும் அந்த படம் தொடங்குவது எப்போது எனவும் இயக்குனர் வெற்றி மாறன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Vetrimaran About Vijay Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளியான ஆடுகளம், அசுரன் ஆகிய திரைப்படங்கள் தேசிய விருதை பெற்றன. இவர் தற்போது நடிகர் சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தினை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு விஜய்யுடன் இணைவது உறுதி என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.