Vetrimaran About Join With KamalHaasan

கமல்ஹாசன் கூட்டணியில் படம் இயக்குவீர்களா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தரமான பதில் அளித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

Vetrimaran About Join With KamalHaasan : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இறுதியாக தனுஷை வைத்து இயக்கி இருந்த அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். மேலும் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவின் தரமான கலைஞர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு வெற்றிமாறன் அளித்த பதில் என்னவென்றால் பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எங்களுடைய விருப்பமாக மட்டும் இருக்கக்கூடாது. அவர்களும் விரும்ப வேண்டும்.

கால்ஷீட் கிடைக்க வேண்டும். இருவருக்கும் ஏற்றார்போல நல்ல கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து பணியாற்றலாம். கமல் சார் போன்ற பெரிய நடிகருடன் இணைந்து பணியாற்ற நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் கமல்ஹாசன் பச்சைக் கொடி காட்டினால் நிச்சயம் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரியவந்துள்ளது.