venkat prabhu story to thalathalapathy

ஒரே படத்தில் தல தளபதி நடிக்கும் வகையில் கதையை தயார் செய்து வைத்திருப்பதாக பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Venkat Prabhu Story to ThalaThalapathy : தமிழ் சினிமாவின் இரு பெரும் மிச்ச நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருமே தங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள்.

இவரது ரசிகர்கள் இப்போது சமூக வலைதளங்களில் எலியும் பூனையும் ஆகவே இருந்து வருகின்றனர். இவர்களை ஒன்றிணைக்க ஒரே வழி அஜித்தும் விஜய்யும் இணைந்து நடிப்பது ஒன்று தான்.

நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ

இந்த முயற்சி தற்போதுள்ள இயக்குனர்களில் வெங்கட் பிரபுவால் மட்டுமே சாத்தியமாகும் என கூறப்பட்டு வருகிறது.

அவரும் இவர்கள் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க ஒரு மாசம் ஆன கதையை தயார் செய்து வைத்துள்ளார். அஜித்தும் விஜய்யும் நடிக்க ஓகே மட்டும் சொன்னால் அடுத்த நாளே ஷூட்டிங்கை தொடங்கி விடுவேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தல தளபதி ஓகே சொல்வார்களா என வெங்கட்பிரபு காத்திருப்பது போல அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்தால் நிச்சயம் அப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.